எறிபந்து போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

 

ஈரோடு, ஜன. 14: சர்வதேச எறி பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி கோப்பையை வென்று சாதனை படைத்த ஈரோடு மாவட்ட வீராங்கனைகளுக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான எறி பந்து போட்டி நேபாளத்தில் கடந்த 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 25 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில், இறுதி போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று ஈரோடு மாவட்டம் குருமந்தூரை சேர்ந்த கேப்டன் அர்ச்சனா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய வீராங்கனைகளுக்கு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், வீராங்கனைகளை சால்வை மற்றும் மாலை அணிவித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகப்படுத்தினர்.

The post எறிபந்து போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: