ஆவுடையார்கோவில் பகுதியில் மழைநீரில் மிதக்கும் சம்பா நெற்கதிர்கள்-விவசாயிகள் வேதனை

அறந்தாங்கி : ஆவுடையார் கோவில் அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிரை பார்த்து விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆவுடையார்கோவில் தாலுகா பூவலூர் வட்டம்பிராந்தனி வருவாய் கிராமத்தில் கருங்காடு பாண்டி பத்திரம்,,பிராந்தணி மற்றும் பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களும், பத்து நாட்களில் அறுவடை செய்ய உள்ள நெல் பயிர்கள் நெல் முற்றியும், முற்றாத நிலையில் தற்போது மூன்று நாட்களாக பெய்த கனமழையால் நெல் பயிர் கலெல்லாம் நெல் முற்றாமல் சாய்ந்ததால் நெல் கதிர்களின் மேல் தண்ணீர் தேங்கிநிற்பதால் நெல் கதிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. அறுவடைக்கு தயாறாக உள்ள சுதிர்களின் மேல் தண்ணீர் நிற்பதால் நெல் கதிர்கள் அழுகும் நிலையில், உள்ளது. இந்த மாதிரி நெல் பயிர்கள் பாதித்து உள்ள பயிர்கள் சுமார் 500 ஏக்கர் வரை இருக்கும், இந்த பயிர்கள் விவசாயம் செய்வதற் குகூட்டுறவு சங்கங்க களிலும், தேசியமாக்கப்பட்டவங்கிகளில் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கி விவசாயம் செய்ய ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயத்திற்கு செய்யவேண்டிய செலவுகளை எல்லாம் செய்து முடித்து, கதிர் அறுவடை செய்ய உள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையால் நெல் பயிர்கள் சாய்ந்து அழுகிவிட்டது. இன்னும் கூடுதலாக மழை பெய்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும். அதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்….

The post ஆவுடையார்கோவில் பகுதியில் மழைநீரில் மிதக்கும் சம்பா நெற்கதிர்கள்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: