சென்னை: ஜிஎஸ்டி அதிகாரிகள் சிறை பிடித்த சம்பவத்தில் ஸ்டீல் விற்பனை நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் நேற்று முன்தினம் ஸ்டீல் விற்பனை நிறுவனத்தில் சோதனை நடத்த வந்த ஜிஎஸ்டி அதிகாரிகளை ஸ்டீல் விற்பனை நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் சிறை பிடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் யானை கவுனி காவல் நிலைய போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கலவரம் செய்தல், மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் ஸ்டீல் விற்பனை நிறுவன உரிமையாளர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
