இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னை: இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், மதுரை நகரம், மதுரை விமானநிலையம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருச்சி ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகியுள்ளது. இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

 

Related Stories: