பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பணி ஓய்வு; மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குநர் லதாவுக்கு கூடுதல் பொறுப்பு

 

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பணி ஓய்வு பெற்ற நிலையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: பள்ளிக்கல்வி இயக்குநராக பணிபுரியும் கண்ணப்பன் நேற்றுடன் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுவதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி தற்போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரியும் லதாவுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆனையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: