சென்னை: ஆளுநர் உரைக்கு பின் சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது :
ஆரம்பத்திலேயே தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு ஒன்றிய அரசு எதனை வலியுறுத்தினர்களோ அதனை பின்பற்றி நடைபெற்றது. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்படுவது ஒன்றும் தவறில்லை. அடுத்த வாரம் மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: முதலமைச்சரின் முதல் போராட்டம் பரந்தூரிலிருந்து தொடங்கப்பட்டது. வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடங்களை ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளது. எனவே பரந்தூர் விமான நிலையம் அமைக்க தவெக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்போம். இதில் தவறு ஒன்றும் கிடையாது. அதற்கு முன்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியிருக்கிறார்கள். அதையும் நாம் வரவேற்போம். ஆளுநர் உரை ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவான உரையாக இருந்தது என்று பிரேமலதா கூறினார்.
