முதல் முறையாக பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வு: ஆளுநர் அர்லேகர் பெருமிதம்

சென்னை: ஆளுநர் அர்லேகர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளதை மக்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, ஆளுநரின் உரை எந்தவித இடையூறுமின்றி பேரவையில் முழுமையாக வாசிக்கப்பட்டது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. மேலும், முதல் முறையாக, கூட்டத் தொடக்கத்திலும் ஆளுநரின் உரை நிறைவடைந்த பின்னரும் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சம்பவம், மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நல்லிணக்கமான உறவு அமைய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்கான சான்றாக திகழ்கிறது என்று கூறுவதில் மிகையில்லை.

ஒரு ஜனநாயக அமைப்பில், ஆட்சி என்பது அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைந்த மற்றும் நல்லிணக்கமான உறவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, நிலையான மற்றும் முன்மாதிரியான அரசாக விளங்க வேண்டும். அந்த உயரிய இலக்கை நோக்கிய எங்களின் கூட்டு பயணம் இன்று தொடங்கியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Related Stories: