பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பிரதாப்கார்: பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. உபி,பிரதாப்கார் மாவட்டத்தை சேர்ந்த சமாஜ்வாடி எம்எல்ஏவாக இருப்பவர் ராகேஷ்குமார் வர்மா. இவர் பாஜ எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவின் அடிப்படையில், எம்பிக்கு எதிராக தகாத கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டி, பாஜ இளைஞர் அணி மாவட்டத் தலைவர் அன்ஷுமன் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து,பிஎன்எஸ் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும், அதாவது அமைதியைக் குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதிக்கும் குற்றத்திற்கான பிஎன்எஸ் சட்ட பிரிவு 352 உள்ளிட்ட பிரிவு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழும் சைபர் பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

Related Stories: