நெல்லை, ஜூன் 16: பாளையங்கோட்டையில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜான்ஸ் பள்ளி மாணவர்கள் அபார வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். சிஏடிசி கேம்ப் 5 தமிழ்நாடு பாட்டாலியன் நெல்லை மாவட்ட தேசிய மாணவர் படை சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை பாளை. ஹைகிரவுண்ட் பகுதியில் செயல்படும் எம்என்அப்துல் ரகுமான் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து என்சிசி மாணவர்களுக்கு இடையே துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி மாணவர்கள் ராகுல் முதலிடத்தையும், வருண்ராஜ் 2ம் இடத்தையும் வென்றனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளரான வழக்கறிஞர் தங்கத்துரை, தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞான தாசன், உதவித் தலைமை ஆசிரியர்கள் கின்ஸ் குமார், பிராங்கிளின், ஆல்வின் மற்றும் என்சிசி ஆசிரியர்கள் இமானுவேல், ஜேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர். வெங்கடேஸ்வரபுரத்திற்கு அரசு பஸ்வசதியின்றி அவதி நெல்லை ஜூன் 16: நெல்லை அருகே தெற்குபட்டியில் இருந்து வெங்கடேஸ்வரபுரத்திற்கு அரசு பஸ்வசதியின்றி அவதிப்படும் அப்பகுதி மாணவர்கள், பெற்றோருடன் திரண்டுவந்து கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்டம், தெற்குபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்ளிட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்து நேற்று நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். மனு விவரம்: குறிச்சிகுளம், தெற்குபட்டி, சீதைக்குறிச்சியில் இருந்து அதிகமான மாணவ, மாணவிகள் வெங்கடேஷ்வரபுரத்தில் படித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சென்று வர எந்த ஒரு பஸ் வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தெற்குப்பட்டியில் இருந்து வெங்கடேஸ்வரபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ், போர்கால அடிப்படையில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தெற்குபட்டி கிளை பொறுப்பளார் முகைதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஹுசைன், சுத்தமல்லி நகரச் செயலாளர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
