மணப்பாறை, ஜூன், 16: புத்தாநத்தம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை நேற்று கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்துஸ 6 இருசக்கர வாகனங்கள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டென்ட் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கீழஈச்சம்பட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புத்தாநத்தம்,
மேலஈச்சம்பட்டி, கண்ணுத்து, விராலிமலை, மணப்பாறை, பொய்கைப்பட்டி மேலதானியம், மூரம்பட்டி, சடையம்பட்டி ,தாதகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சேகர், மணிகண்டன், பாலமுருகன், கண்ணன், சிவா, கிருஷ்ணன், பாலாஜி, சேது, முருகேஷ், கிருஷ்ணமூர்த்தி, தெய்வீகநாதன் மற்றும் அன்பு செல்வம் என 12 நபர்களையும் கையும் களவுமாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 12 செல்போன் மற்றும் 06 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான புத்தாநத்தம் போலீஸார் 12 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
