நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி: முதல்வர் உத்தரவு

 

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வு முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கும், இதன்மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக, https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் பிரசாந்த் மு. வடநெரே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் பழனிசாமி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: