வட கடலோரப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்

 

சென்னை:வட கடலோரப் பகுதியில் வெப்பம் சற்று அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும், வளி மண்டலத்தில் சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் இ ருந்து மத்திய வங்கக் கடல் பகுதிகள் வரையில் லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டு இருப்பதால் 23ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 71 மிமீ மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 304 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. பிற இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் இ ருந்து மத்திய வங்கக் கடல் பகுதிகள் வரையில் லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது.

அதன் காரணமாக கோவை மாவ ட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. அதே நிலை இன்றும் தொடரும். 22ம் தேதியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈ ரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இது தவிர 23ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 24ம் தேதி வரை வட கடலோர தமிழகத்திில் ஓரிரு இடங்களில் சற்று உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதியில் நேற்று வெப்ப அலை வீசியதாக கூறப்படுகிறது.

மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் இ ன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 103 டிகிரி வ ரை இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50கிமீ முதல் 60கிமீ வேகத்தில் இன்று வீசும்.

மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 50 கிமீ முதல் 60கிமீ வேகம் வரையில் 24ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

3 இடங்களில் 108 டிகிரி வெயில்
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் நேற்று வெப்பம் அதிகரித்ததால் சென்னை மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியுள்ளது. மேலும், நாகப்பட்டினம், மதுரையில் 102 டிகிரி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 100 டிகிரி வெயில் நிலவியது.

Related Stories: