விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு; முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவு: திருமாவளவன் பேட்டி

 

சென்னை: அயோத்திதாசர் பிறந்த நாளை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: விசிக, ஐயூஎம்எல் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர் ஆகிய முன்னணி பொறுப்பாளர்களுடன் இந்த அழைப்பு குறித்து கலந்து பேசி முடிவை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து விசிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெற வாய்ப்புள்ளது என தெரிகிறது. இதற்கிடையில் திருமாவளவன் நிருபர்களிடம், ‘அதிமுகவில் இருந்து ஒரு பிரிவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் வழங்கினால் எங்கள் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும் நான் கூறியிருந்தேன். தற்போது அதிமுகவில் இருந்து ஒரு பிரிவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பில்லை என தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

Related Stories: