புதுடெல்லி: நீதிபதி வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை மக்களவை சபாநாயகரிடம் விசாரணை குழு சமர்ப்பித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவை சபாநாயகரிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் அளித்தனர். இதனைதொடர்ந்து விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த நாடாளுமன்ற விசாரணைக்குழுவானது தனது விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.
