ரூ.50 லட்சம் லஞ்ச வழக்கில் ராணுவ கர்னல் அதிரடி கைது: சிபிஐ நடவடிக்கை

 

புதுடெல்லி: கான்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக, டெண்டர்களை வழங்குவதில் முறைகேடு செய்ததாக ராணுவ கர்னல் ஒருவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில், நிலுவையில் உள்ள லஞ்சப் பணத்தை தனக்குத் தெரிந்த ஒருவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. நிலுவையில் உள்ள ரூ.50 லட்சம் லஞ்சத் தொகையை ஹவாலா வழிகள் மூலம் அனுப்ப இருந்ததாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. இந்த லஞ்ச வழக்கில் கர்னலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தனியார் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: