டேராடூன்: ராணுவ அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர் மேஜர் ஜெனரல் பி.சி.கந்தூரி (91).உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை ( 2007 முதல் 2009 வரை) (இரண்டாவதாக 2011 முதல் 2012 வரை) பதவி வகித்தவர் பி.சி.கந்தூரி.வாஜ்பாய் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார். 91 வயதான கந்தூரி வயது முதிர்வு, உடல்நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பி.சி. கந்தூரி சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
