புதுடெல்லி: டெல்லியில் பாதுகாப்பு சிந்தனைக் குழு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசுகையில், ‘‘12 மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் பவர் என்று அழைக்கப்படும் கேள்விக்கு இந்தியா உலகிற்கு ஒரு பகுதி பதிலை வழங்கியது. 2025ம் ஆண்டு மே 6-7 தேதிக்கு இடைப்பட்ட இரவில் பாரதம் செயல்பட்டது.
துல்லியமாக வரையறுக்கப்பட்ட 22 நிமிட நடவடிக்கைக் காலத்திற்குள் ஆபரேஷன் சிந்தூர் ராணுவத் துல்லியம், தகவல் கட்டுப்பாடு, ராஜதந்திர சமிக்கை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு ஆகியவற்றை ஒரே ஒருங்கிணைந்த தேசிய நடவடிக்கையாக வழங்கியது. நாங்கள் ஆழமாக தாக்கினோம். பின்னர் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்டு நிறுத்தினோம். 88 மணி நேரத்திற்கு பின் தோன்றிய அந்த திட்டமிட்ட சிந்தனை அதன் முழுமையான வெளிப்பாட்டில் ஒரு புத்திசாலித்தனமான சக்தியாகும். இது ஸ்மார்ட் பவர் என்பதன் முழுமையான வெளிப்பாட்டை பிரதிபலித்தது” என்றார்.
