நள்ளிரவில் டிரைவரிடம் வழிப்பறி: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் முருகேசன் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (31). இவர் கார் டிரைவர். நேற்றிரவு தனது அக்காவை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூருக்கு ரயிலில் ஏற்றிவிட்டு இரவு 11 மணி அளவில் பெரம்பூர் பாரதி சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் மறித்து சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர். இதுபற்றி தர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததால் திருவிக.நகர் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், எஸ்ஐ தீபன் ஆகியோரின் தலைமையில் போலீசார் வந்து தரிடம் விசாரணை நடத்தினர்.

இதன்பின்னர் புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை பகுதியில் 4 பேரை பிடித்து ஸ்ரீதரிடம் இருந்து திருடப்பட்ட மணிபர்சை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் செம்பியம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், வியாசர்பாடி சிவசக்தி விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுகுமார் (19), பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆமோஸ் (19) மற்றும் வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் என தெரிந்தது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 2 பேரையும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

Related Stories: