பாலக்கோடு அருகே பயங்கரம் சுத்தியலால் அடித்து பெண் படுகொலை

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொப்பிடி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன். இவரது மனைவி தனலட்சுமி(40). இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய சகோதரர் மாரிமுத்துவின் மகன் செந்தில்அரசு (28), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், வெங்கடேசனுக்கும் விவசாய நிலத்திற்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அப்போது தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுட்பட்ட செந்தில்அரசு, ஆத்திரத்தில் சென்ட்ரிங் வேலை செய்ய பயன்படுத்தும் இரும்பு சுத்தியலால், தனலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தனலட்சுமி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிந்து தலைமறைவான செந்தில் அரசுவை தேடி வருகின்றனர்.

Related Stories: