சாம்பியன் டிராபியில் இந்தியாவுக்கு பதில் இலங்கை?


துபாய்: ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன.  இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு பதிலாக இலங்கை அல்லது துபாயில் இந்தியாவின் போட்டிகளை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.  ஒருவேளை இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு செல்லாமல் தொடரை இந்தியா புறக்கணிக்கும். அவ்வாறு நடந்தால் இந்தியாவுக்கு பதிலாக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இலங்கை சேர்க்கப்படலாம்.

The post சாம்பியன் டிராபியில் இந்தியாவுக்கு பதில் இலங்கை? appeared first on Dinakaran.

Related Stories: