ஆட்டம் தொடங்கிய 14வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்ஜீத் சிங் அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து முதல் பாதியின் 27வது நிமிடத்தில் உத்தம் சிங் தன் பங்குக்கு ஒரு கோலடித்து அசத்தினார். அதனால் முதல் பாதியில் இந்திய 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 2வது பாதியிலும் சீனாவின் போராட்டம் பலன் தரவில்லை. பந்து பெரும்பாலும் இந்திய வீரர்கள் வசம்தான் இருந்தது. அதன் பலனாக 32வது நிமிடத்தில் அபிஷேக் சர்மா கோலடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
இந்தியா தரப்பில் அடித்த 3 கோல்களும் களத்தில் இருந்து அடிக்கப்பட்ட ஃபீல்டு கோல்கள்தான். அதன் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த 4பெனால்டி கார்னர் உட்பட 5வாய்ப்புகளில் ஒன்றைக் கூட கோலக்க முடியவில்லை. சீனாவுக்கு கிடைத்த 4 பெனால்டி வாய்ப்புகளும் அதேபோல் வீணாகின. அதனால் ஆட்டத்தின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்திய இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
The post ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி appeared first on Dinakaran.