நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உள்ளூர் நட்சத்திரம் டெய்லர் ஃபிரிட்ஸ் (26 வயது, 12வது ரேங்க்) உடன் மோதிய யானிக் சின்னர் (23 வயது, இத்தாலி) 6-3, 6-4, 7-5 என நேர் செட்களில் வென்று முதல் முறையாக யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது.
இது சின்னர் வென்ற 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி. ஓபனில் அவர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார். நடப்பு சீசனில் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் தொடர்களின் அரையிறுதி வரை முன்னேறினார். கடந்த ஜூன் மாதம் ஏடிபி தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி சாதனை படைத்தார்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.