இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி(37). அவர் விரைவில் தொடங்க உள்ள ஆஸிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் இடம் பெறவில்லை. இந்நிலையில் அவர் நேற்று, ‘இங்கிலாந்துக்காக நிறைய விளையாடி உள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம். அதனால சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருமுறை ஓய்வை அறிவித்திருந்த அவர், அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அணியில் இணைந்தார். அவர் 68 டெஸ்ட், 138ஒருநாள், 92டி20 போட்டிகளில் முறையே 3094, 2355, 1229ரன்னும், முறையே 204, 111, 51விக்கெட்களும் வசப்படுத்தி உள்ளார். ஐபிஎல் போட்டியில் பெங்களூர், சென்னை அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
* அனந்தபூரில் நடந்த துலீப் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் இந்தியா பி-இந்தியா ஏ அணிகள் மோதின. அதில் நேற்று அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான பி அணி 76ரன் வித்தியாசத்தில் சுப்மன் கில் தலைமையிலான ஏ அணியை வீழ்த்தியது. பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 3வது நாளே 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியை சாய்த்தது.
* அரசுப் பள்ளி, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான 4வது சென்னை கால்பந்து லீக் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை சேத்பட்டு நேரு பூங்கா விளையாட்டுத் திடலில் நடைபெறும், இந்தப்போட்டியில் 14 மாணவிகள் அணி உட்பட மொத்தம் 36 அணிகள் பங்கேற்கின்றன.
* சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஏ டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இன்று முதல் செப்.22ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஐசிஎப், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமானவரி, ஜிஎஸ்டி உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
* அகில இந்திய புச்சிபாபு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நெல்லையில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 288ரன் எடுத்திருந்தது.
The post சில்லிபாயிண்ட்…. appeared first on Dinakaran.