நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக் கட்டுவோம்: அமைச்சர் உதயநிதி ட்வீட்

 

சென்னை: நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக் கட்டுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூரை சேர்ந்த அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் 2017ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனதை எண்ணி அந்த ஏழை மனம் விம்மியது. எனினும் துக்கம் தாளாமல் அதே ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரது 6-வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ட்பல்வேறு மாவட்டங்களில் திமுக மாணவர் அணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனிதாவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதனிடையே அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் கூறியதாவது, நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக் கட்டுவோம்: அமைச்சர் உதயநிதி ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: