ஆந்திராவிலிருந்து மணல் எடுத்து வர முதல்வர் அனுமதி வழங்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்.முனிரத்தினம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 75000 மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மற்றும் 10 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருகிற 8ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 120 மணல் குவாரிகளை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் தமிழகத்தை சேர்ந்த மணல் லாரிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மணல் எடுத்து வர ஆந்திர முதல்வரிடம் கோரிக்கை வைத்து தமிழக மணல் லாரி உரிமையாளர்களுக்கு அனுமதி வாங்கி தர வேண்டும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், .உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் அதிகமாக நடைபெறும். கட்டுமான தொழிலை நம்பி பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆந்திராவிலிருந்து மணல் எடுத்து வர முதல்வர் அனுமதி வழங்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: