சென்னையில் உள்ள ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை துரிதமாக முடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அடையாறு மண்டலங்களில் மறுசீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை அகற்றும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மடிப்பாக்கம் இராஜேஷ்வரி நகர் முதல் பிரதான சாலையில் குடிநீர் வாரிய பணிகள் முடிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன், இன்று (08.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைந்து பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, அடையாறு மண்டலம் வார்டு -175 வேளச்சேரி ஏரியில் ஆம்பிபியன் வாகனங்கள் மூலம் ஆகயத்தாமரை அகற்றப்படும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆகாயத்தாமரைகளை துரிதமாக அகற்றிட உத்தரவிட்டார். வேளச்சேரி ஏரியில் 137 லாரிகள் மூலமாக ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் உள்ள ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை துரிதமாக முடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: