சென்னை – கொல்கத்தா சாலையில் புழல் பகுதியில் எரியாத மின் விளக்கு: விபத்தில் சிக்கும் வாகனங்கள்

புழல்: புழல் பகுதியில் எரியாத மின் விளக்கால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலத்தில் இருந்து புழல் மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல்கழனி, சாமியார்மடம், செங்குன்றம் பைபாஸ் சாலை, திருவள்ளூர் கூட்டு சாலை, மொண்டியம்மன்நகர், பாடியநல்லூர், நல்லூர் சுங்கச்சாவடி, ஆத்தூர், காரனோடை மேம்பாலம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சாலையின் மைய பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் பல்புகள் எரியாமல் உள்ளது.

இதன்காரணமாக புழல் சைக்கிள் ஷாப், மத்திய சிறைச்சாலை, காவாங்கரை சிக்னல், வடகரை, செங்குன்றம் சிக்னல், சோத்துப்பாக்கம் செங்குன்றம் சிக்னல் உள்பட பல இடங்களில் இரவு நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடந்து செல்லும் பொதுமக்கள் மீது வாகனங்கள் மோதிவிடுவதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் நடைபெற்றுள்ளது. ‘’இதுசம்பந்தமாக பலமுறை நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடமும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துவிட்டனர்.

இருப்பினும் விளக்குகள் அனைத்தும் எரிவதற்குஉரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, எரியாத மின்விளக்குகளை கண்காணிக்கக வேண்டும். புதிதாக மின்விளக்கு அமைத்திட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைகளில் மின்கம்பங்கள் கூட இல்லை. இதனால் சர்வீஸ் சாலைகளில் எதிரெதிரே செல்லும் வாகனங்கள் மோதி விபத்து நடக்கிறது. எனவே சர்வீஸ் சாலைகளிலும் மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்கு ஏரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புழல், செங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சென்னை – கொல்கத்தா சாலையில் புழல் பகுதியில் எரியாத மின் விளக்கு: விபத்தில் சிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: