நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கபட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும்.

The post நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: