தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 9-ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கோடை வெப்பம் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் முன் கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

முன்பெல்லாம் பள்ளி கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் துவங்கி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவும் அதிகக் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பது சற்று தள்ளிவைக்கப்பட்டு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு பள்ளிகள் எப்போது திறக்கும், விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படாததால் ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி முதல் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

அதேபோல் புதுச்சேரியில் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த மூன்று நாட்களாக 101 முதல் 102 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. கடும் வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தேதியை ஒத்தி வைக்க அரசியல் கட்சி மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கோடை வெப்பம் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: