திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களுக்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திமுக மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேறுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றுள்ளார். கடந்த 28-ம் தேதி இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்தார். அதில் மாவட்ட செயலாளர்கள், கட்சி வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனை கூட்டம் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், வாக்கு என்ண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கிகொண்டிருகின்றனர்.

The post திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: