பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தை நாடிய டெல்லி அரசு!!

டெல்லி: டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு, அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது யமுனை ஆற்றில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீரை வீணாக்கினால் அவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் அதிஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு. டெல்லி அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்; மற்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள் அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லி பெறுகின்ற நீரின் அளவு குறைந்துள்ளது. அதனால் தண்ணீரின் தேவை கூடியும், விநியோகம் குறைந்தும் உள்ளது. இதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடி தேர்வு காண வேண்டும். இந்த நேரத்தில் அரசியல் ஆதாயம் பெறுவதை காட்டிலும் மக்களின் நலனுக்காக கூடி பணியாற்ற அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பாஜக ஆட்சி செய்யும் அரியானா மற்றும் உத்தரப் பிரதேச அரசுடன் பேசி கூடுதலாக ஒரு மாத காலம் நீர் திறக்க சொல்ல வேண்டும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

The post பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தை நாடிய டெல்லி அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: