மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் 7-ம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று இறுதி கட்ட கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது .

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சலப்பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி கட்டமாக நடக்கும் 57 தொகுதியில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்.

இதற்காக 1.09லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. இறுதிக்கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியும் அடக்கம்.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த உடன் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இதையடுத்து, 7 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

The post மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: