தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 4 முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களிலும், 2-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல்3-ம் தேதி வரை குமரிக்கடல்பகுதிகள், மன்னார் வளைகுடாஅதனை ஒட்டிய தென் தமிழககடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடமாவட்டங்களில் வீசிவரும் வெப்ப அலை இன்றுடன் முடிவுக்கு வரும். தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் நிலவும் வெப்பசலனம் காரணமாக இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: