தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.
பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post வெற்றியின் முகட்டில் நிக்கிறது இந்தியா கூட்டணி.. பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை தகர்த்துவிட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!! appeared first on Dinakaran.