ரூசோ 22ம் ஆண்டு நினைவுநாள் நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி

தேவகோட்டை, நவ.9:  சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர் ரூசோ. இவர் கடந்த 1998ம் வருடம் நவ.8ம் தேதி தேவகோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். நேற்று அவரது 22ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் மாவட்டச்செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமையில், முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தேவகோட்டை யூனியன் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இருந்து ரூசோ சிலை வரை திமுகவினர் ஊர்வலமாக வந்தனர். ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி.செந்தில்குமார், நகரச்செயலாளர் பாலமுருகன், முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், மாவட்ட பிரதிநிதி கருப்பாக்குடி கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ மற்றும் மாவீரன் ரூசோ பேரவையினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாவீரன் ரூசோ பேரவை, தமிழ்நாடு பார்க்கவகுல சங்கம், தென்னக பார்க்கவகுல சங்கம், பார்க்கவன் பாசறை, ரவி பச்சமுத்து(ஐஜேகே), ரூசோவின் மகனும் திரைப்பட நடிகருமான ஆண்டனி நிஷாந்த், ராஜாஸ்டீபன், ஜெம்மா நிபிலா, முன்னாள் கவுன்சிலர் இளங்கோ, ராமநாதன், ஜான்பிரிட்டோ, முத்துராஜன், சேசுராஜா, ராஜரெத்தினம், அன்புச்செல்வம், அழகையா, வளனரசு, ராஜா, ரெஜிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: