ராகுல்காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் ரத்த தான முகாம்

கும்பகோணம், ஜூன் 20: கும்பகோணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் நடைபெற்றது. மயிலாடுதுறை எம்.பி தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாளை நேற்று காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் காவேரி நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் தலைமையில் ராகுல்காந்தி 54வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி ராமலிங்கம், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகர திமுக அவைத்தலைவர் வாசுதேவன், திமுக துணைச்செயலாளர் ப்ரியம் சசிதரன், மாமன்ற திமுக உறுப்பினர் அனந்தராமன், மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்ஷாதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஜீவா, விசிக மாவட்ட செயலாளர் முல்லைவளவன், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ராகுல்காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: