போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பட்டுக்கோட்டை, ஜூன் 20: பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் மதுவிலக்கு டி.எஸ்.பி. தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு சார்பில் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகதாஸ் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலால் தாசில்தார் சுமதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகதாஸ் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தில், தங்களது பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்தாலோ அல்லது போலி மதிபானங்கள் தயாரித்தாலோ, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் அல்லது தயாரித்தாலோ, இதர மதுபானங்கள் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம். அலைபேசி எண் 9498171100. தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581.

The post போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: