மனோராவில் அஞ்சல்துறை சிறப்பு யோகா நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை, ஜூன் 20: பட்டுக்கோட்டை அருகே மனோராவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அஞ்சல்துறை சார்பில் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சர்வதேச யோகா தின நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அறிவுறுத்தலின்படி தஞ்சை மாவட்ட சுற்றுலாத்தலமான பட்டுக்கோட்டை அடுத்த மனோராவில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

யோகா பயிற்சியாளர் சூரியஜோதி முன்னிலையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர்கள் பிரியதர்ஷினி, முருகேசன் உள்பட 50க்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதேபோல் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூவில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது. திருத்துறைப்பூண்டி உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் மணிகண்டன் உள்பட 50க்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

The post மனோராவில் அஞ்சல்துறை சிறப்பு யோகா நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: