ஜம்மு காஷ்மீரில் தங்கம் வென்ற குத்து சண்டை வீரருக்கு கலெக்டர் பாராட்டு

மயிலாடுதுறை, ஜூன் 20: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த 4வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் புரமோஷன் நேஷனல் சாம்பியன் ஷிப் தேசிய குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை வட்டம் பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாணவர் வீராசிவாஜியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கினார்கள். மயிலாடுதுறை வட்டம் பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாணவர் வீரசிவாஜி கடந்த 11 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய குத்துசண்டை போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.இவரின் சாதனை பாராட்டி கௌரவிக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர்,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஜம்மு காஷ்மீரில் தங்கம் வென்ற குத்து சண்டை வீரருக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: