ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் கூட்டமாக சென்ற 94 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை, அக்.20: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் கூட்டமாக சென்ற 94 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் புதுச்சத்திரத்தில் உள்ள இடஒதுக்கீடு தியாகி குடும்பத்திற்கு வீடு கட்டிக்கொடுப்பதற்காக மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் விஜிகே. மணிகண்டன் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர். வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்கள் ஏற்றிய லாரி சென்று விட்ட நிலையில் கடலூர் செல்வதற்கு மயிலாடுதுறை கண்ணாரத்தெருவிற்கு வந்தபோது மயிலாடுதுறை டிஎஸ்பி.அண்ணாதுரை மற்றும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து திரும்பிப்போகும்படி கூறினர். ஆனால் யாரும் திரும்பிச் செல்லாததால் அவர்களைக் கைது செய்து நேற்றுமுன்தினம் மாலையில் அவர்களை விடுதலை செய்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் நேற்று சங்கத்தின் நிறுவனர் விஜிகே.மணிகண்டன்(43), சந்திரசேகர்(39), சங்கர்(44), சுதாகர்(38), சுரேந்தர்(24), பாபுராஜ்(36), மேலும் 88 நபர்கள்மீது சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: