திருவாரூர் கோடை மழைக்கு என்ன சாகுபடி சிறந்தது: தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம்

திருத்துறைப்பூண்டி, மே 24: கோடை மழைக்கு என்ன சாகுபடி சிறந்தது என்று திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இளவரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தற்போது பருவ மாற்றத்தால் கோடை மழையானது அதீத மழை பொழி வினை பொழிந்து வருகிறது. இந்த அதீத மழைப்பொழிவில் காய்கறி பயிர்களை தவிர்த்து நீண்ட நாள் பயிர்களான மா, கொய்யா, வாழை, மல்லிகை பூ போன்ற பயிர்கள் நடவு செய்வதன் மூலம் செடிகளின் வேர்களுக்கு தேவையான ஈரப்பதம் கிடைப்பதுடன் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சீதோசன நிலை கிடைக்கிறது. மேலும் அவ்வாறு நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு எந்தவித நிழல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. செடிகள் நடவு செய்த பின் செடிகளின் வேர்களைச் சுற்றி நன்கு மண் அணைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நடவு செய்யப்பட்ட செடிகள் அழுகலில் இருந்து தவிர்க்க முடியும். மேலும் மேடான பகுதிகளில் தேர்வு செய்து கோடை மழை காலங்களில் காய்கறி பயிர்களான கத்திரி, மிளகாய் மற்றும் வெண்டை போன்றவை சாகுபடி மேற்கொள்வது சிறந்தது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் கோடை மழைக்கு என்ன சாகுபடி சிறந்தது: தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: