தனிக்கைகுழு ஆய்வு விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக தெப்ப திருவிழா

விராலிமலை, மே 24: விராலிமலையில் நடைபெற்ற முருகன் கோயில் வைகாசி விசாக தெப்பத்திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா சரண கோஷத்துடன் தெப்பத்தில் எழுந்தருளிய முருகனை வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைகோடி பகுதியாகவும், திருச்சியில் இருந்து 28 கிமீலும் அமைந்துள்ளது விராலிமலை. நகரின் மத்தியில் அமைந்துள்ள மலையின் மேல் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சியளிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசத் தேரோட்டம், கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் 10ம் நாளான நேற்று (வியாழக்கிழமை) மதுரை சாலையில் அமைந்துள்ள தெப்பகுளத்தில் தெப்பஉற்சவம் நடைபெற்றது.

முன்னதாக மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாலை 5 மணியளவில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார். தெப்பக்குளத்தில் நீர் குறைவாக இருந்ததால் நிலை தெப்பமாக விழா நடத்தப்பட்டது வழக்கமாக இரவு நடைபெறும் விழா மழை பெலிவு இருக்கலாம் என்ற நோக்கில் முன்னதாக மாலையே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா சரண கோஷத்துடன் சுவாமி வழிபாடு நடத்தினர்.தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் தெப்பக்குளத்தில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது,

The post தனிக்கைகுழு ஆய்வு விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக தெப்ப திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: