திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி,கல்வி நிதி வழங்கல்

திருச்செந்தூர், மே 24:திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியின் 2022-2023ம் ஆண்டுக்கான லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ரூ.1,01,651 மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ.67,768 ஆக மொத்தம் ரூ.1,69,419க்கான காசோலையினை வங்கியின் துணைப்பதிவாளர்/செயலாட்சியர் சீனிவாசன், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர்/செயலாட்சியர் சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சாம் டேனியல் ராஜிடம் வழங்கினார். வங்கியின் பொதுமேலாளர் (பொறுப்பு) மாரியப்பன் உடனிருந்தார்.

The post திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி,கல்வி நிதி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: