திருச்சியில் 1349-வது சதய விழா தமிழர் தேசம் கட்சியினர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு புனித நீரூற்றி வழிபாடு

திருச்சி, மே 24: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளான சதய விழாவை ஒவ்வொரு ஆண்டும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை) திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 வது சதய விழா வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே. செல்வகுமார் தலைமையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் முதல் நிகழ்வாக நேற்று காலை 6 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து 108 பேர் குடங்களில் புனித நீர் எடுத்து வந்து ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு புனித நீரூற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.பின்னர் பேரரசர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். இந்த நிகழ்ச்சியில், தமிழர் தேசம் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வைரவேல், மாநிலத் துணைத் தலைவர் சம்பத், மண்ணச்சநல்லூர் ரவிச்சந்திரன், இளைஞரணி மாநில செயலாளர் குணசேகரன் மற்றும் தமிழர் தேசம் கட்சி வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அரசியல் கட்சி தலைவர்கள்: பின்னர் ஒத்தக்கடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரரசருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது தமிழர் தேசம் கட்சித் தலைவர் கேகே.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் மாலை 4 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் கே.கே. செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தமிழர் தேசம் மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திருச்சியில் 1349-வது சதய விழா தமிழர் தேசம் கட்சியினர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு புனித நீரூற்றி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: