ஏரல், உமரிக்காடு அரசு பள்ளிகளில் பிளஸ்2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஏரல், மே 24: ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதையடுத்து அப்பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வெழுதிய 90 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சமீரா மரியம் 564 மதிப்பெண் பெற்று முதலிடமும், லத்தீபா அரின், மெஹர் அப்ரினா ஆகியோர் 544 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடங்களையும், பாத்திமா அஸ்வினா 542 மதிப்பெண் எடுத்து மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். மேலும் கணிதத்தில் கார்த்திகா, லத்திகா ஆப்ரின் ஆகியோரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

The post ஏரல், உமரிக்காடு அரசு பள்ளிகளில் பிளஸ்2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: