கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்து: விரிஞ்சிபுரம் அருகே கோயிலுக்கு சென்றபோது

பள்ளிகொண்டா, மே 24: கோவையிலிருந்து திருத்தணி கோயிலுக்கு காரில் சென்றபோது விரிஞ்சிபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இன்ஜினியர் குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் அலறிதுடித்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

அப்போது, அங்கிருந்தவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், கோவையை சேர்ந்த கிருஷ்ண சைதன்ய பிரயாகா என்பதும், அவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் நேற்று தனது மனைவி, குழந்தைகளுடன் திருத்தணி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்லும்போது மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

The post கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்து: விரிஞ்சிபுரம் அருகே கோயிலுக்கு சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: