கல்லூரி பேராசிரியையிடம் செயின், செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகள் 3 பேருக்கு வலை

கே.வி.குப்பம், மே 24: குடியாத்தத்தில் தெருவில் நடந்து சென்ற பேராசிரியையிடம் செயின், செல்போன் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா(24). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். சினேகா நேற்று தனது வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 மர்ம ஆசாமிகள், சினேகா பேசிக்கொண்டிருந்த செல்போன் மற்றும் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம ஆசாமிகள் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் சினேகா புகார் செய்தார். அதன்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து, செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற பைக் ஆசாமிகளை தேடி வருகிறார்.

The post கல்லூரி பேராசிரியையிடம் செயின், செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகள் 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: