பல்லடம் அருகே பூமலூர் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

பொங்கலூர், மார்ச் 4:  பல்லடம் அருகே பூமலூரில் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  இயந்திரங்கள், பஞ்சு, நூல் மூடைகள் எரிந்து சேதமானது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர் திருப்பூர் பாரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்வடிவு என்பவருக்கு சொந்தமான இடம் பூமலூர் கூட்டுறவு சொசைட்டி அருகே உள்ளது. அங்கு நில வாடகைக்கு நூற்பாலை நடத்தி வருகிறார். இதில் தென்மாவட்டம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது பஞ்சு அரவை இயந்திரத்தில் இருந்து புகை வந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிந்து பரவத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த பல்லடம், திருப்பூர், அவிநாசி பகுதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான 200 பஞ்சு பேல் மூடைகள், இயந்திரங்கள், உதிரி பாகங்கள், கட்டிடம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.