கம்பம், பிப். 17: கம்பம் பகுதியில் புறவழிச்சாலைக்காக, தாழ்வாகச் செல்லும் மின்வயர்களை உயர்த்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், கேரளாவின் எல்லைப்பகுதியாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக கேரளாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும் கேரளாவில் உள்ள தேக்கடி, இடுக்கி, தூக்குபாலம், பருந்துப்பாறை, திருவனந்தபுரம், கொச்சின், மூணாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தளங்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதைக் குறைக்கும் வகையில் பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.280.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
