தேனி, ஜன. 9: தேனி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்த வேண்டும் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பார்கவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு 2025-2026ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம், உரிமக்கட்டணம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகைக் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
